யாமும் மாந்தரே இப்பூவுலகில்
நமக்கு வேற்றுமை
நூல் இழையில்
யாமும் அறிவோம் பூலோகத்தை
யாம் அறியாதது அணுகுமுறையை
புகழ்ந்தால் எம்மனம் புல்லரிக்காது
இகழ்ந்தால் எம்மனம் இறந்து விடாது
பொறாமை அறியா மாந்தர் யாம்
பெற்றோர் பாசம்
அறிந்தோம் யாம்
ஆகாயம் போல் அகம் எமக்கு
அன்றலர்ந்த மலர் போல்
குணம் அதற்கு
யாம் பெற்றது மன நோய் அல்ல
மானுட பாவம்
அதை தீர்க்கும் சக்தி பெற்றீர் மாந்தர் தாமே !
